'கோவாக்சின்' தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்? - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

'கோவாக்சின்' தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்?

 'கோவாக்சின்' தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்?


அடுத்த ஆண்டு, பிப்., மாதம் அறிமுகம் செய்யப்படும், 'கோவாக்சின்' தடுப்பூசியை, முதற்கட்டமாக பெறுவோர் பட்டியலை, முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசு உருவாக்கி உள்ளது


கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில், தெலுங்கானாவின் ஐதராபாதில் உள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.இந்த தடுப்பூசி, அடுத்த ஆண்டு பிப்., மாதம் அறிமுகம் செய்யப்படும் என, தெரிகிறது.


முதற்கட்டமாக, 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நிலையில், அவற்றை வினியோகம் செய்வதற்கான இறுதிப் பணிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.


இதற்காக, நான்கு பிரிவினர் அடங்கிய ஒரு திட்ட அறிக்கையை, சிறப்பு குழுவினர் தயாரித்து உள்ளனர். முதல் பிரிவில் டாக்டர், நர்ஸ், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் உட்பட மருத்துவத்துறையில் பணியாற்றும், ஒரு கோடி பேர் இடம் பெற்றுள்ளனர்.


 அடுத்ததாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக பங்காற்றும் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை பிரிவினர் என, இரண்டு கோடி பேர் உள்ளனர்.மூன்றாவது பிரிவில், கொரோனா வைரசால் எளிதில் பாதிக்கப்படும், 50 வயதிற்கு மேற்பட்ட, 26 கோடி பேர் உள்ளனர்


. நான்காவதாக, எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் உள்ள, 50 வயதிற்கு உட்பட்ட ஒரு கோடி மக்கள் இடம் பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதுடன், ஆதார் அட்டை உதவியுடன் கண்காணிக்கப்படுவர். 


ஆதார் அட்டை இல்லாதவர்கள், அரசின் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.தடுப்பூசி வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை, மாநில அரசுகள் மேற்கொள்வது குறித்து, மத்திய அரசின் சார்பில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன

No comments:

Post a Comment