பி.ஆர்க்., கவுன்சிலிங் இன்று துவக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

பி.ஆர்க்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

 பி.ஆர்க்., கவுன்சிலிங் இன்று துவக்கம்


பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று கவுன்சிலிங் துவங்க உள்ளது.


தமிழகத்தில் உள்ள, 52 பி.ஆர்க்., கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், 'ஆன்லைனில்' ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு, நவம்பர், 2ல் முடிந்துள்ளது. 


மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.


இதையடுத்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்க உள்ளது. பொது பிரிவு மாணவர்களுக்கு, நாளை மற்றும் 10ம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது; 11ம் தேதி தோராய இட ஒதுக்கீடும், 12ல், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவும் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment