மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்ய வசதி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்ய வசதி

 மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்ய வசதி


மருத்துவ படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பம் சமர்ப்பித்த பின், திருத்தம் மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறினார்.தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


 இதற்காக, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது


அதன்படி, ஐந்து நாட்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, 17 ஆயிரத்து, 239 பேர்; தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, 8,494 பேர் என, மொத்தம், 25 ஆயிரத்து, 733 பேர் பதிவு செய்துள்ளனர்.


இவர்களில், 10 ஆயிரத்து, 190 பேர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.


இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


 தற்போது, விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்தவர்களுக்கும், சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, அதிக அழைப்புகள் வருகின்றன.


 எனவே, தங்கள் விண்ணப்பத்தில், சேர்க்க வேண்டிய பதிவுகள் மற்றும் சான்றிதழ் இருந்தால், selmedi@yahoo.co.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு, விண்ணப்ப பதிவு எண்ணுடன் சேர்க்க வேண்டிய சான்றிதழ்களை இணைத்து அனுப்பலாம்.

No comments:

Post a Comment