தமிழக மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 12, 2020

தமிழக மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு

 தமிழக மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு


கல்பாக்கம் பள்ளி மாணவியின் கற்பித்தல் விளக்க முறையை பிரதமர் மோடி சமூக வலைதளமான டுவிட்டரில் பாராட்டினார்.


செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரதீப் ~ அபர்ணா தம்பதியின் மகள் இந்திரா அர்ஜூன் 9. கேந்திரிய வித்யாலயா இரண்டாவது பள்ளியின் 4ம் வகுப்பு மாணவி. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கில் வீட்டில் இருந்த மாணவி அலைபேசி செயலிகளை பயன்படுத்தும் முறைகளை அறிந்து கற்பித்தல் விளக்க முறையை உருவாக்கினார்.


'ஆகுமெண்டல் ரியாலிட்டி' செயலியை பயன்படுத்தி வீடியோ காட்சி முறையில் கற்பித்தல் முறையை உருவாக்கினார்


.செயலி இயக்கத்தில் உயிரோட்ட பசு, யானை, புலி உள்ளிட்ட மிருகங்களுடன் இவரே அருகிலிருந்து அவை குறித்து விளக்குவதாக வீடியோ பதிந்துள்ளார். பதிவை டுவிட்டர் யு டியூப் என சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.


இதை கடந்த செப். இறுதியில் 'டுவிட்டர்' மூலம் அறிந்த பிரதமர் மோடி சிறுமியின் முயற்சியை பாராட்டி டுவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.மாணவி இந்திரா கூறியதாவது: விர்ச்சுவல் ரியாலிட்டி அலைபேசி செயலி பயன்படுத்த ஆர்வம் உண்டு. ஆகுமெண்டல் ரியாலிட்டி ஆப்பை அறிந்து அதன் மூலம் கற்பித்தல் முறையை உருவாக்கினேன்


. புத்தக படிப்பைவிட காட்சி முறையில் எளிதில் விளக்கலாம் என்பதால் இதை உருவாக்கினேன். நான் உருவாக்கியதை பிரதமர் மோடி டுவிட்டரில் கவனித்து என்னை வாழ்த்தினார். அவருக்கு நன்றி. நம் எலும்புக் கூட்டை விளக்கும் வீடியோவை தற்போது உருவாக்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. Really,amazing, superb... 👍🤩😍☺️👌😊😱😱💖💖😳😳🤪😎🥳😁😅😂🤣🙂🙃🤔🤔🤔🤔🤔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete