B.Tech.லேட்ரல் என்ட்ரி சேர்க்கை ...விண்ணப்பித்த அனைவருக்கும் 'சீட்' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 12, 2020

B.Tech.லேட்ரல் என்ட்ரி சேர்க்கை ...விண்ணப்பித்த அனைவருக்கும் 'சீட்'

 B.Tech.லேட்ரல் என்ட்ரி சேர்க்கை ...விண்ணப்பித்த அனைவருக்கும் 'சீட்'


புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 


இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். பாலிடெக்னிக் மாணவர்கள், பி.எஸ்சி., படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த மாணவர்களும் பி. டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கின்றனர்.


இந்தாண்டிற்கான லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு ஆன்~லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன


.புதுச்சேரியில் இரண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 426 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்கள் உள்ளன. ஆனால், 160 மாணவ மாணவிகள் தான் லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.


 அதில், 45 பேர் மட்டுமே சேர்க்கைக்கான தகுதியுடைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மீதமுள்ள 115 மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்யவில்லை. இவர்களில் ஒன்றிரண்டு மாணவர்களாவது, சேர்க்கை பெற தகுதி பெறுவார்களா என சென்டாக் நிர்வாகம் கவலையில் ஆழ்ந்துள்ளது. 


சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்யுமாறு சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.மேலும், இந்தாண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைக்கும் என்ற நிலை உறுதியாகி உள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் ஆறு அரசு பாலிடெக்னிக், இரண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 2,200 சீட்கள் உள்ளன.இந்தாண்டு கொரோனா ஊரடங்கில் இறுதி தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 'ஆல் பாஸ்' அளிக்கப்பட்டுள்ளது. 


அரியர் வைத்துள்ள மாணவர்கள் கூட பாஸ் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பி.டெக்., லேட்ரல் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்


.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது


தகவல் தொழில்நுட்ப துறை உச்சத்தில் இருந்தபோது பொறியியல் படிப்பு, பாலிடெக்னிக் மாணவர்களின் கனவு படிப்பாக இருந்தது. 


இதன் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்து லேட்ரல் முறையில் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாமாண்டு சேர ஆர்வம் காட்டினர். 


ஆனால் இன்றைக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமை அப்படி இல்லை. அத்துறையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு தலைகீழாக மாறிவிட்டது.


 படித்தவர்களுக்கு வேலையில்லை. சம்பளமும் குறைவாகவே கிடைக்கிறது.அதே நேரத்தில் பாலிடெக்னிக் முடித்த உடனே நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விடுகின்றது.


 பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்வும், சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம். அதனால் எதிர்காலம் இல்லாத பொறியியல் படிப்புகளை தவிர்க்க துவங்கியுள்ளனர்.


 இதன் காரணமாகவே பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை டல் அடிக்க துவங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment