போனஸ் அறிவிப்பில் ஏமாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

போனஸ் அறிவிப்பில் ஏமாற்றம்

 போனஸ் அறிவிப்பில்  ஏமாற்றம்


கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் வெங்கடசாலபதி கூறிய தாவது:


கூட்டுறவு துறையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்களில் ஒரு லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.


 இதற்குமுன் பொதுத் துறை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களும் இடம் பெறும். ஆனால் நவ.,2 அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்கள் இடம் பெறவில்லை. 


இதனால் சங்க பணியாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். சங்க பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் வழக்கமான ரூ.15 ஆயிரம் பண்டிகை முன்பணம் அறிவிப்பை தமிழக அரசு உடன் அறிவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment