ஓய்வூதியதாரர்கள் '‛டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழை 'ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

ஓய்வூதியதாரர்கள் '‛டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழை 'ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம்

 ஓய்வூதியதாரர்கள்  '‛டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழை 'ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம்


'ஓய்வூதியதாரர்கள், 'டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழை' ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


ஆண்டுதோறும், ஓய்வூதியதாரர்கள் நவம்பரில், அரசு அலுவலகங்களில் நேரடியாக ஆஜராகி, தங்கள் இருப்பை, டிஜிட்டல் சான்றிதழ் வாயிலாக, பதிவு செய்ய வேண்டும்.


 இதற்காக, வங்கிகள், பொது சேவை மையங்களில், டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழ் வழங்கப்படுகிறது


.கொரோனா தொற்று காரணமாக, மத்திய அரசின், 'ஜீவன் பிரமாண்' திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்கள், டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழ், பதிவு செய்ய வரும்போது, ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க, ஆண்டு முழுவதும், சான்றிதழ் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இதன்படி, ஓய்வூதியதாரர்கள், ஒரு முறை சான்றிதழ் பதிவு செய்தால், அது, பதிவு செய்த நாளில் இருந்து, ஓராண்டு முழுவதும் செல்லத்தக்கதாக கருதப்படும் என, அதிகாரிகள் கூறினர்.


மேலும், நடப்பாண்டு ஓய்வூதிய ஆணை பெற்றவர்கள், ஓராண்டு முடியும் வரை, சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும், அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment