மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கூடுதல் மையம் எதிர்பார்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 21, 2020

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கூடுதல் மையம் எதிர்பார்ப்பு

 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு  கூடுதல் மையம் எதிர்பார்ப்பு


மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சி.பி.எஸ்.சி., மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு, சி.டெட்., நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு தேர்வு ஜூலை, 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனாவால், தேதி ஒத்தி வைக்கப்பட்டு, 2021 ஜன.,31ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



நாடு முழுவதும் உள்ள, 112 மையங்களில் நடத்தப்படுவதாக இருந்த தேர்வு, 135 மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், 'தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி என, நான்கு தேர்வு மையங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. 



கொரோனா பாதிப்பு உள்ள சூழலில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, குறிப்பிட்ட தேர்வு மையத்துக்கு வருவது, நோய் தொற்று அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்திலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க, வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment