அலட்சிய அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 8, 2020

அலட்சிய அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

 அலட்சிய அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை


நிர்வாக நலனுக்கு எதிராக, அதிகாரிகள் செயல்படுவதால், வழக்குகளில் பாதகமான தீர்ப்பு வருகிறது. 


அதற்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து, இனி, வழக்கு செலவு வசூலிக்கப்படும்' என்று, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா அனுப்பிஉள்ள சுற்றறிக்கை


:பள்ளி கல்வித்துறைக்கு எதிரான வழக்குகளில், உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், துறைக்கு பாதகமாக தீர்ப்புகள் வருகின்றன. 


மேல்முறையீடு, சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவற்றை, உடனுக்குடன் தாக்கல் செய்யாமல், நிர்வாக நலனுக்கு முரணாக, திட்டமிட்டே காலம் தாழ்த்தி தாக்கல் செய்கின்றனர்.அதனால், அந்த மனுக்கள், நீதிமன்றத்தில்ஏற்கப்படாமல், துறைக்கு பாதகமான தீர்ப்புகள் வருகின்றன. 


இதை தொடர்ந்து, பலரும் அதேபோன்ற வழக்கு தொடர்கின்றனர்.இதனால், அரசுக்கு வீணான நிதி இழப்பு ஏற்படுகிறது. 


மேலும், மாவட்ட அதிகாரிகளின் அலட்சியங்களால், உயர் அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், தேவையற்ற இடர்பாடுகளும் உருவாகின்றன.


எனவே, இனி வரும் காலங்களில், துறைக்கு பாதகமாக தீர்ப்புகள் வந்தால், அதில் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களே, அதற்கு முழு பொறுப்பாவர் என, திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது


.இதில், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, எந்த விளக்கமும் ஏற்கப்படாது. வழக்குக்கான நிதி இழப்பும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment