பி.ஆர்க்., கவுன்சிலிங் 12ம் தேதி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், நேற்று துவங்கியது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஐந்தாண்டு பி.ஆர்க்., பட்ட படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது
.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, அக்., 23 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, நவம்பர், 6ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, நேற்று கவுன்சிலிங் துவங்கியது. முதல் கட்டமாக, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இன்றும், நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு விருப்ப பதிவு நடக்கிறது. நாளை மறுநாள், உத்தேச ஒதுக்கீடும், அதன்பின், வரும், 12ம் தேதி, இறுதி ஒதுக்கீட்டு உத்தரவும் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு, 52 கல்லுாரிகளில், 3,500 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது; 1,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment