தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 8, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு

 தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு


அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவச் சேர்க்கையில், உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி, நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


சங்கத்தின் தலைமை நிலைய செயலர் பழனிவேலு அளித்த பேட்டி:அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்களே, அரசு உதவி பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கும், அரசின் சார்பில், 'நீட்' இலவச பயிற்சி வழங்கப்படுகிறது


அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 எனவே, மாணவர்களின் நலன் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் மாணவர்களையும் சேர்க்க வேண்டும்,மேலும், உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.


ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை, முன்னர் இருந்தது போல், 57 ஆக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க வேண்டும். 


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment