விடுதிகளை காலி செய்ய மாணவர்களுக்கு அண்ணா பல்கலை உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 8, 2020

விடுதிகளை காலி செய்ய மாணவர்களுக்கு அண்ணா பல்கலை உத்தரவு

 விடுதிகளை காலி செய்ய மாணவர்களுக்கு அண்ணா பல்கலை உத்தரவு


விடுதி அறைகளை, வரும், 21ம் தேதிக்குள் காலி செய்யும்படி, மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, மார்ச் முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அவர்கள் வீட்டிலிருந்தபடி, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.


மேலும், கொரோனா காரணமாக, மத்திய அரசு, மார்ச்சில் ஊரடங்கு அறிவித்ததும், அண்ணா பல்கலை விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், தங்கள் உடைமைகளை விட்டு விட்டு, சொந்த ஊருக்கு சென்றனர்.


இந்நிலையில், இன்னும் சில வாரங்களில் கல்லுாரி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கப்படும் நிலை உள்ளது.


 அதனால், சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, பல்கலை தரப்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


விடுதிகளில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், விடுதி மாணவர்கள் தங்களின் உடைமைகளை, சென்னைக்கு வந்து எடுத்து செல்ல வேண்டும். வரும், 21ம் தேதிக்குள் எடுக்காவிட்டால், அவை உடைமை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment