இரு நாட்களுக்கு கனமழை எங்கே? - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 6, 2020

இரு நாட்களுக்கு கனமழை எங்கே?

 இரு நாட்களுக்கு கனமழை எங்கே?தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


குமரி கடல் பகுதியில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில், இன்று(நவ.,7) முற்பகல் வரை, இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இன்று பிற்பகல் முதல் நாளை முற்பகல் வரை, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலுார், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment