புயலால் நின்ற கவுன்சிலிங் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 29, 2020

புயலால் நின்ற கவுன்சிலிங்

 புயலால் நின்ற கவுன்சிலிங்


நிவர்' புயலால் ஒத்தி வைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், இன்று முதல் துவங்குகிறது.


சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள் விளையாட்டரங்கில், எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான கவுன்சிலிங், இம்மாதம், 18ம் தேதி துவங்கியது.


ஒத்திவைப்பு


அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவினர் ஒதுக்கீடு முடிந்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கிய நிலையில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 24 முதல், 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடைபெற இருந்த கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டது.


நிவர் புயலால் ஒத்தி வைக்கப்பட்ட கவுன்சிலிங், இன்று முதல் துவங்கி, டிசம்பர், 10ம் தேதி வரை நடைபெறும். இடையில் வரும், 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.


 தினமும், 300 - 500 பேர் வரைகவுன்சிலிங்கிற்குஅழைக்கப்பட உள்ளனர். எந்த தேதியில், எந்தெந்த நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு வர வேண்டுமென, மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


.சந்தேகம்


இதற்கிடையே, அடுத்து உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, கவுன்சிலிங் மீண்டும் பாதிக்கப்படுமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வ ராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட கவுன்சிலிங், இன்று முதல் துவங்குகிறது.


'மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களை, தொடர்ந்து கவனித்து வர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment