விற்பனைக்கு வந்த இலவச புத்தகங்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 29, 2020

விற்பனைக்கு வந்த இலவச புத்தகங்கள்

 விற்பனைக்கு வந்த இலவச புத்தகங்கள்


அரசு உதவி பெறும் பள்ளியில், ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு வழங்கிய இலவச புத்தகங்களை, தனியார் பள்ளிகளுக்கு, 50 சதவீத விலையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.


கொரோனா ஊரடங்கு காலத்திலும், தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பாடத்திற்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இலவச புத்தகங்களை வழங்கியுள்ளது. 


ஆங்கில வழி கல்வி கற்பிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகள், அதற்கான அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.


 சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, திருப்புத்துார், தேவகோட்டை ஆகிய கல்வி மாவட்டங்கள் செயல்படுகின்றன.


இதில், தேவகோட்டை கல்வி மாவட்டத்தின் கீழ், 50க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன.


 தற்போது, ஆன்லைனில் வகுப்பு நடப்பதால், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவச - ஆங்கில வழி கல்வி புத்தகங்களை வழங்காமல், கல்வித் துறை ஊழியர்கள் சிலர், வழங்கியதாக கணக்கு காண்பித்து, தனியார் பள்ளிகளுக்கு, அந்த புத்தகங்களை, 50 சதவீத விலையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தேவக்கோட்டை கல்வி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், அரசு வழங்கும் இலவச புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்ததாக, தணிக்கை துறையினர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இது குறித்து, தேவக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன் கூறியதாவது:


இலவச புத்தகங்களை வெளியில் விற்பதாக, எனக்கு எவ்வித புகாரும் வரவில்லை. நான் வருவதற்கு முன், இப்படி நடந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். புகார் வந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment