அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது எப்படி? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, November 3, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது எப்படி?

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது எப்படி?


மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான உள் ஒதுக்கீடு சட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து பா.ஜ.,வின் அஸ்வத்தாமன் தெளிவு படுத்தியுள்ளார்.


அவர் கூறியதாவது: 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதில் எம்.பி.சி.,க்குரிய 20 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் வழங்கப்படும். 


அரசுப் பள்ளிகளில் படித்த பிற்பட்ட (பி.சி,), மிகவும் பிற்பட்ட (எம்.பி.சி.,) பிரிவு மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் நிரப்பப்படுவர். நீட் தேர்விற்கு முன் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்த எண்ணிக்கையை விட, நீட்டிற்கு பின் அதிகரித்துள்ளது. இதை 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மேலும் அதிகப்படுத்தும்.


 கவர்னர் ஒப்புதல் அளித்த அரசாணைப்படி, ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத்தான் இச்சலுகை கிடைக்கும்.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வந்தது


.நீட் வந்தாலும், வராவிட்டாலும் சி.பி.எஸ்.இ., தரத்திற்கு இணையான பாடத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியிருக்க வேண்டும் என்பது சட்டப்பூர்வ எதிர்பார்ப்பு. தற்போது அது நடந்துள்ளது.


 பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டது நீட் தேர்வால் நடந்துள்ளது. நீட் வந்திருக்காவிடில் சமச்சீர் கல்வியின் தரம் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக உயர்த்தப்பட்டு இருக்குமா என்பது கேள்விக்குறியே


.இவ்வளவு நாள் மெக்காலே கல்வி முறையால் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், தேசிய கல்விக் கொள்கையை உள்வாங்கி, மாணவர்களுக்கு எப்படி புரியும் வகையில் கற்பிக்க முடியும் என கேள்வி எழுகிறது


.அதற்கு கல்விமுறையில் சீர்திருத்தம், மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பிப்பது, எப்படி கேள்விகள் எழுப்புவது என ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


'கட்~ ஆப்' தகுதியில் தேர்ச்சி பெறும் மாணவர் மட்டுமே டாக்டராக முடியும் என்பது 'நீட்'டின் அடிப்படை. பணம் இருக்கிறது என்பதற்காக டாக்டராக முடியாது.


 எதிர்பார்க்கும் அறிவு இருந்தால்தான் டாக்டராக முடியும். 'கட்~ ஆப்' தேர்ச்சியடைந்து, ரேங்கிங்கில் வேறுபாடு இருந்தால் உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைய வாய்ப்புள்ளது என்றார்.

No comments:

Post a Comment