நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, November 3, 2020

நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்

 நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்


'வாக்காளர் சிறப்பு முகாம், நான்கு நாட்கள் நடத்தப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, வரும், 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


 அன்று முதல், டிச.,15 வரை, வாக்காளர் திருத்தப் பணி நடைபெறும். வாக்காளர்கள் வசதிக்காக, வரும், 21, 22ம் தேதிகளிலும், டிச., 12, 13ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்


.இம்முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு, ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கலாம்.


அவர்கள் சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, சரி பார்க்க உதவலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. வாக்காளர் அட்டை முகவரி திருத்தம் செய்து இரண்டு வருடம் ஆகிறது இதுவரையில் அட்டை வழங்கவில்லை பிறகு ஏதற்கு இவங்க அரசு அதிகாரிய இருக்காங்க, என்னத்த புடு

    ReplyDelete
  2. ஆதாரை ஏன் வாக்காளர் அட்டையில் சேர்க்கவில்லை ,கள்ள ஓட்டு போடவா

    ReplyDelete
  3. திருத்தம் செய்தவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்காதது ஏன்? ??

    ReplyDelete