புதிய கல்வி கொள்கை: பல்கலைகள் அவசரம் காட்டக்கூடாது:பாமக நிறுவனர் ராமதாஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, November 3, 2020

புதிய கல்வி கொள்கை: பல்கலைகள் அவசரம் காட்டக்கூடாது:பாமக நிறுவனர் ராமதாஸ்

 புதிய கல்வி கொள்கை:  பல்கலைகள் அவசரம் காட்டக்கூடாது:பாமக நிறுவனர் ராமதாஸ்


புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், பல்கலைகள் அவசரம் காட்டக்கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:நாட்டில், புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அமைச்சரவை, ஜூலை, 29ல் ஒப்புதல் அளித்தது.


 அதைத் தொடர்ந்து, புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.புதிய கல்வி கொள்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, பல்கலைகளுக்கு, மானியக்குழு அழுத்தம் கொடுத்து வருகிறது.


இந்த கொள்கையில், சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், சமூக நீதிக்கு எதிரான பல விஷயங்களும் உள்ளன.


 அதன் சாதக, பாதகங்களை ஆராயாமல், புதிய கல்வி கொள்கையை அப்படியே செயல்படுத்தி விட முடியாது.எனவே, தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு எந்த அழுத்தமும் தராமல், மத்திய அரசும், பல்கலை மானியக்குழுவும் விலகியிருக்க வேண்டும்.


தமிழக பல்கலைகளும், புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில் அவசரம் காட்டக் கூடாது.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment