மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம்: பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்படுத்த கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 3, 2020

மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம்: பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்படுத்த கோரிக்கை

 மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம்: பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்படுத்த கோரிக்கை


மாணவியருக்கு தற்காப்பு கலைபயிற்சிகளை, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது


.பள்ளிக்குழந்தைகள், பல சூழ்நிலைகளில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.


இப்பிரச்னைகளிலிருந்து, பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, பள்ளிகளில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.முதலில், ஒரு வட்டாரத்துக்கு, ஒரு பள்ளியில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை பெற்றோர் வரவேற்றனர்.


 இதனால், திட்டத்தை அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும்,பெண் குழந்தைகள்மட்டுமின்றி, மாணவர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகள் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.


ஒரு கல்வியாண்டில், மூன்று மாதங்களுக்கு பயிற்சி வகுப்பாக, வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. மாணவர்களும் ஆர்வத்தோடு இதில் பங்கேற்கின்றனர்.


 சில பள்ளிகளில், பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக, நாட்களை அதிகரித்தும் பயிற்சி வழங்கினர்.மாணவ மாணவியர், தற்போது, பள்ளிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட வில்லை.


 இருப்பினும், இத்தகைய பயிற்சிகளை வழங்குவதால், வீட்டில் முடங்கியிருக்கும் அவர்கள் மனதளவில் புத்துணர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.


மேலும், ஒரு வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதால் சமூக விலகல் பின்பற்றி, பயிற்சி வழங்குவதற்கும், சாத்தியமுள்ளதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.


 இப்பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதால், பாடம் கற்பதிலும், ஆர்வத்தோடு, இருப்பதற்கான சூழல் ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால், மாணவர்களுக்கு, போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, கராத்தே பயிற்சி வகுப்புகளை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment