தீபாவளிக்கு 15 ஆயிரம் பஸ்கள்: நவம்பர் 11 முதல் இயக்க அரசு ஏற்பாடு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, November 3, 2020

தீபாவளிக்கு 15 ஆயிரம் பஸ்கள்: நவம்பர் 11 முதல் இயக்க அரசு ஏற்பாடு

 தீபாவளிக்கு 15 ஆயிரம் பஸ்கள்: நவம்பர் 11 முதல் இயக்க அரசு ஏற்பாடுதீபாவளி பண்டிகைக்கு, சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, இம்மாதம், 11ம் தேதி முதல், 8,757 சிறப்பு பஸ்கள் உட்பட, 14 ஆயிரத்து, 757 பஸ்கள் இயக்கப்படும். 


இதற்கான, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 10 நாட்களே உள்ளன. இந்நிலையில், தீபாவளிக்கான சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து, போலீஸ், நெடுஞ்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.


சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது


:கடந்தாண்டு தீபாவளிக்கு, மூன்று நாட்களுக்கு முன், சென்னையில், ஐந்து சிறப்பு புஸ் நிலையங்களில் இருந்து, 11 ஆயிரத்து, 111 பஸ்கள் இயக்கப்பட்டன. 


அவற்றில், ஆறு லட்சத்து, 70 ஆயிரத்து 630 பேர் பயணித்தனர்.இந்தாண்டு தீபாவளி பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், 11 முதல், 13ம் தேதி வரை, சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம். சென்னையில் இருந்து, வெளியூர்களுக்கு வழக்கமாக, 2,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன.


இதன்படி, மூன்று நாட்களுக்கு, 6,000பஸ்கள்; சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து, ௮,௭௫௭ சிறப்பு பஸ்கள் என, மொத்தம், 14 ஆயிரத்து, 757 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்தபின், தொழில் நகரங்களுக்குத் திரும்பும் வகையில், 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன


இதன்படி, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும், 2,000 பஸ்களுடன் கூடுதலாக, 3,416 பஸ்கள்; மற்ற ஊர்களுக்கு, 4,610 பஸ்கள் என, மொத்தம், 16 ஆயிரத்து, 26 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


முன்பதிவு மையங்கள்?* சென்னையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10; தாம்பரம் சானட்டோரியத்தில், 2; பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒன்று என, மொத்தம், 13 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன* இவை மட்டுமின்றி, www.tnstc.in, tnsctcஎன்ற மொபைல் போன் செயலி, www.paytm.com, www.busindia.com என்ற இணையதளங்களிலும் பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம்.தாம்பரத்திற்கு வராது


முன்பதிவு செய்துள்ள பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, பயணியரை ஏற்றி, பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச் சாலை சென்று, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்லும். தாம்பரம், பெருங்களத்துாரில் ஏறும் வகையில், முன்பதிவு செய்தோர், அங்கு சென்று ஏற வேண்டும்.காரில் செல்வோருக்கு...


* கார் மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்லாமல், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் - செங்கல்பட்டு வழியாக செல்லலாம்.


சிறப்பு பஸ் நிலையங்கள் எங்கே?


சென்னையைப் பொறுத்தவரை, நெரிசலைக் குறைக்கும் வகையில், 11 முதல், 13ம் தேதி வரை, ஐந்து இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் செயல்படும். * செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்


திண்டிவனம் வழியாக, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பஸ்கள், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்


* தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்களும் புறப்படும்


* வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்


மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோவைக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.


கட்டுப்பாட்டு அறை


* பஸ்களின் இயக்கம் குறித்து அறியவும், புகார் அளிக்கவும், 94450 14450, 94450 14436 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம்


கோயம்பேடு பஸ் நிலையத்தில், எந்நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் தகவல் மையங்களை நேரில் 


அணுகலாம்


* வெளியூர் செல்லும் பயணியரின் வசதிக்காக, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு, மாநகர இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.

No comments:

Post a Comment