காஸ் சிலிண்டர் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, November 3, 2020

காஸ் சிலிண்டர் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி

 காஸ் சிலிண்டர் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி


விலை குறைவாக இருப்பதால், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர்களை, பலர் முறைகேடாக, ஓட்டல் உள்ளிட்ட வணிக நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டரை வினியோகம் செய்கின்றன.வீட்டு சிலிண்டர் விலை குறைவாக இருப்பதால், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது.


தற்போது, வீட்டு சிலிண்டர், 610 ரூபாயாக உள்ள நிலையில், வணிக சிலிண்டர் விலை, 1,354 ரூபாயாக உள்ளது.


 இரண்டிற்குமான விலை வித்தியாசம் மிகவும் அதிகம்.வீட்டு சிலிண்டர் பதிவு செய்த உடனே,வினியோகம் செய்யப்படுகிறது. 


இதனால், ஓட்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிலர், வேலையாட்கள் உள்ளிட்ட நபர்களிடம் இருந்து, வீட்டு சிலிண்டரை வாங்கி, முறைகேடாக, வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர்.இதற்காக, அவர்களுக்கு, சிலிண்டர் விலையுடன் கூடுதலாக, 200 ரூபாய் வரை வழங்குகின்றனர்.


இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீட்டு சிலிண்டரை, வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால், சிலிண்டர் பறிமுதல் செய்யப்படும்; அதை பயன்படுத்தியவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரத்திற்கு, வீட்டு சிலிண்டர் பயன்படுத்துவதை தடுக்க, எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவுபோலீசாரும், ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

1 comment: