கற்போம் எழுதுவோம் திட்டபாடப் புத்தகங்கள் வருகை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 26, 2020

கற்போம் எழுதுவோம் திட்டபாடப் புத்தகங்கள் வருகை

 கற்போம் எழுதுவோம் திட்டபாடப் புத்தகங்கள் வருகை


திண்டுக்கல்லில் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் கற்போர், தன்னார்வலர்களுக்கான பாடப்புத்தகங்கள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


அனைத்து தரப்பு மக்களும் அடிப்படை கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'கற்போம் எழுதுவோம்' எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


 இத்திட்டம் அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தன்னார்வலர்கள் மூலம் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. திண்டுக்கல்லில் 2801 ஆண்கள், 8404 பெண்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 205 பேருக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ.30 முதல் 561 மையங்களில் சிறப்பு வகுப்புகள் துவங்க உள்ளன.


 இவர்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் கற்போருக்கு 'அடிப்படை எழுத்தறிவு நுால்', தன்னார்வலர்களுக்கு 'ஆசிரியர் கையேடு'வழங்கப்பட உள்ளது. இப்புத்தகங்கள் நேற்று அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment