தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 27, 2020

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்

 தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்


'நிவர்' புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவங்கின.


தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் மார்ச்சில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள், இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் கல்வி, 'டிவி' வழியாக மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.


தனியார் பள்ளி, கல்லூரிகள், 'ஜூம், கூகுள் மீட்' உள்ளிட்ட இணையதளங்கள் வழியே, ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


 இதனால், தமிழகம் முழுதும், பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், புயல் கரை கடந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கின. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மட்டும், வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment