இந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மூன்று நாட்களுக்கு வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 26, 2020

இந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மூன்று நாட்களுக்கு வாய்ப்பு

 இந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மூன்று நாட்களுக்கு வாய்ப்பு


தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை வேளாண் பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் கட்டணம் செலுத்தவும், விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், மூன்று நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைத்துறை தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:


தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளில் சேருவதற்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், முன்னுரிமை மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பட்டியலிட்டு பல்கலை தயார் நிலையில் வைத்துள்ளது


.கலந்தாய்வு முதற்கட்டப்பணியாக மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களில் குறைபாடு இருப்பின் மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


அதன்படி  29ம் தேதி வரை மாணவர்கள் குறிப்பிட்டுள்ள கல்லூரி மற்றும் இடம் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பை மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளோம் மின்னல் கல்விச்செய்தி.விண்ணப்பித்த தகவல்களில் மாற்றம் செய்ய, நவ., 29 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment