I.T.I தேர்வு ஒத்தி வைப்பு
நிவர்' புயல் காரணமாக, இன்று நடக்கவிருந்த, ஐ.டி.ஐ., தேர்வு, அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு, இம்மாதம், 23ம் தேதி முதல், அகில இந்திய தொழிற்தேர்வு நடந்து வருகிறது.
நிவர் புயல் காரணமாக, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, ஏழு மாவட்டங்களில், அனைத்து பொது போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, மத்திய அரசு ஒப்புதலுடன், இன்று முதல், 27ம் தேதி வரை நடக்கவிருந்த, அகில இந்திய தொழிற்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், டிச., 3 முதல் 5வரை நடத்தப்பட உள்ளது

No comments:
Post a Comment