M.B.A., M.C.A துணை கவுன்சிலிங் நடைபெறும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 12, 2020

M.B.A., M.C.A துணை கவுன்சிலிங் நடைபெறும் தேதி அறிவிப்பு

 M.B.A., M.C.A துணை கவுன்சிலிங் நடைபெறும் தேதி அறிவிப்பு


எம்.பி.ஏ., ~ எம்.சி.ஏ., படிப்புகளுக்கான துணை கவுன்சிலிங், 18ம் தேதி நடக்க உள்ளது.


தமிழகத்திலுள்ள பல்கலை, இன்ஜி., கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மேலாண்மை கல்லைரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.ஏ., ~~ எம்.சி.ஏ., படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நடந்தது.


வரும், 18ம் தேதி, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில், எம்.பி.ஏ., ~ எம்.சி.ஏ., படிப்புகளுக்கு துணை கவுன்சிலிங் நடக்க உள்ளது. 


பொது கவுன்சிலிங் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள், இதில், நிரப்பப்பட உள்ளன.பொது கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்கள், கவுன்சிலிங்கில், கல்லூரி ஒதுக்கீடு பெறாதவர்கள், 'டான்செட்~2020' தேர்வு எழுதி, இதுவரை கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்து விண்ணப்பிக்காதவர்கள், பதிவு செய்யாதவர்கள் என, அனைவரும் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.


இதற்காக அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்ப மற்றும் கவுன்சிலிங் கட்டணத்துடன், 18ம் தேதி காலை, 10.00 மணிக்கு முன், நேரிடையாக கவுன்சிலிங் மையமான கோவை ஜி.சி.டி., கல்லூரிக்கு சென்று பங்கேற்கலாம்


.இந்த துணை கவுன்சிலிங் தரவரிசை மற்றும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும். மேலும் தகவல்களை www.gct.ac.in/www.tn~mbamca.com என்ற, இணையதளத்தின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment