குரூப்-1 தேர்வு 9 நாட்கள் உள்ளநிலையில் ஹால்டிக்கெட்டை பதவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

குரூப்-1 தேர்வு 9 நாட்கள் உள்ளநிலையில் ஹால்டிக்கெட்டை பதவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவிப்பு

 குரூப்-1 தேர்வு 9 நாட்கள் உள்ளநிலையில் ஹால்டிக்கெட்டை பதவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவிப்பு


ஜனவரி 3ம் தேதி குரூப்-1 தேர்வு நடக்கும்நிலையில் திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் one time registration ஐடியுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் அறிவித்துள்ளதால் தேர்வாளர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், ஹால்டிக்கெட்டை பதவிறக்கம் செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள்.


நடப்பு ஆண்டு கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கால் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.


 தற்போது கரோனா கட்டுக்குள் வந்ததால் ஜனவரி 3ம் தேதி குரூப் -1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ள தேர்வாணையம் கூறியுள்ளது. 


ஆனால், திடீரென்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் one time registration ஐடியுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் கூறியுள்ளதால் ஹால்டிக்கேட்டை பதவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவிக்கின்றனர்

No comments:

Post a Comment