துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்!: அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு குழு நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 22, 2020

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்!: அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு குழு நோட்டீஸ்

 துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்!: அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு  குழு நோட்டீஸ்


துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிக்கு கலையரசன் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் ஊழல் புகாரினை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


 இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராகும் படி கலையரசன் குழு உத்தரவிட்டுள்ளது. 


கேட்கப்படும் ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழக தரப்பு தாமதப்படுத்துவதாக கருத்து நிலவுகின்ற சூழலில் வருகின்ற திங்கட்கிழமை விசாரணை குழு கேட்டுள்ள ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

No comments:

Post a Comment