பயின்ற பள்ளிக்கு ரூ.2 கோடி நன்கொடை :முகம் காட்டாமல் உதவிய முன்னாள் மாணவர் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

பயின்ற பள்ளிக்கு ரூ.2 கோடி நன்கொடை :முகம் காட்டாமல் உதவிய முன்னாள் மாணவர்

 பயின்ற பள்ளிக்கு ரூ.2 கோடி நன்கொடை :முகம் காட்டாமல் உதவிய முன்னாள் மாணவர்


துாத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மூலம் 

மாதந்தோறும் பள்ளிக்கு ரூ.58 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.


பள்ளி செயலர் எம்.முரளி கணேசன் கூறியதாவது:''துாத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி முன்னாள் மாணவர்களிடம் நிதி பெற்று ஏழை மாணவியரின் கல்வி கட்டணத்தை செலுத்துகிறோம்.


 கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 201 மாணவியரின் பெற்றோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம். ஆன்லைன் கல்விக்காக ஏழை மாணவ~மாணவியருக்கு ரூ.1 லட்சம் செலவில் அலைபேசிகள் வாங்கி கொடுத்துள்ளோம்.


இங்கு 1973 முதல் 78 வரை துவக்கப்பள்ளி பயின்ற ஒருவர் தற்போது கலிபோர்னியாவில் ஐடி நிறுவனம் ஒன்றில் இயக்குநராக உள்ளார். அவர் துாத்துக்குடியில் உள்ள ரூ.2 கோடி 

மதிப்பிலான 5 வீடுகளை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். 


இதன் மூலம் பள்ளிக்கு மாதந்தோறும் ரூ.58 ஆயிரம் வாடகை வருமானமாக பள்ளிக்கு கிடைக்கும். இந்த தொகை ஏழை மாணவியரின் கல்விக்காக பயன்படுத்தப்படும்'' என்றார்.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி, பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எம்.சாந்தினி கவுசல், உதவி தலைமை ஆசிரியர் ஆர்.விபாஸ்ரீ ஆகியோர் அவருக்கு நன்றி 

தெரிவித்தனர். அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment