பள்ளிகளில் சுகாதார வசதிக்கு ரூ. 54 லட்சம் நிதி வழங்கிய ஜப்பான் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 24, 2020

பள்ளிகளில் சுகாதார வசதிக்கு ரூ. 54 லட்சம் நிதி வழங்கிய ஜப்பான்

 பள்ளிகளில் சுகாதார வசதிக்கு  ரூ. 54 லட்சம் நிதி வழங்கிய ஜப்பான்


நீலகிரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை கட்ட, ஜப்பான், 54 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.


சென்னையில் உள்ள துாதரகம் வாயிலாக, தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், கழிவறை கட்ட, ஜப்பான் அரசு நன்கொடை அளித்து வருகிறது.


 இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில், 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நிதியுதவி 54 லட்சம் ரூபாயில், பள்ளிகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஜப்பான் துாதரக அதிகாரி, ஹோட காவா அஜிமி பேசுகையில், ''கழிவறை அமைப்பதால் பொது இடங்கள் சுகாதாரமாக இருக்கும்.


 பள்ளிகளுக்கு மாணவர்கள் சுகாதாரமாக வந்து செல்ல முடியும். குறிப்பாக, பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டுவதை தடுக்க முடியும்,'' என்றார்.

No comments:

Post a Comment