கல்வி உதவி தொகை 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

கல்வி உதவி தொகை 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்

 கல்வி உதவி தொகை 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்


நீலகிரியில், கல்வி உதவி தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:


மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட, கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், 2020~21ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.


11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு; ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி; பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள் உட்பட பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது.


மேலும், தொழில் கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி பயில்பவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித்தொகை பெறுவதற்கு, www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


 இதற்கு கால அவகாசம் வரும், 31~ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மதிப்பெண் வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment