30 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பவர்கள், தாங்களாகவே மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை மாநகராட்சி, 'கிரீன் கலாம்' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், மியாவாக்கி நகர்ப்புற அடர்வனம் உருவாக்குவதற்காக, 1 சதுர மீட்டருக்கு, 250 வீதம், 10 ஆயிரம் சதுர அடியில், 25 வகையான, 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நடிகர்விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி
:சுற்றுப்புற சூழலுக்கு தனி கவனம் செலுத்த, முதல்வர் உத்தரவுப்படி, மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து, மியாவாக்கி அடர்வனங்களை உருவாக்கி வருகின்றன. தமிழகத்தில், பஸ் நிறுத்தம், கடை தெருக்கள் போன்ற பல இடங்களில், பொது மக்கள் முக கவசம் இன்றியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
இனிமேல் வரவுள்ள தடுப்பூசியை நம்பாமல், நிரந்தர தீர்வான முக கவசத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைவரும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்
.சென்னை ஐ.ஐ.டி.,யில், 106 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், அண்ணா பல்கலையில், 279 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும், ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
தமிழகம் முழுதும் கல்லுாரிகளில் இருந்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்க பட்டு உள்ளன. அதில், 1.7 சதவீதம் மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் பாதிப்பு, ௩ சதவீதமாக உள்ளது.இதனால், பெரிய அளவில் தொற்று பரவல் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னர், அறிகுறி இருந்தால் மட்டும், பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம்.
தற்போது, தமிழக அரசிடம் தேவையான வசதிகள் இருப்பதால், சந்தேகம் இருந்தால் கூட, அனைத்து சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:சென்னையில், திறந்தவெளி நிலங்களில், ௧,௦௦௦ இடங்களில், மியவாக்கி காடுகளை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், மாநகராட்சி பயணித்து வருகிறது. தற்போது வரை, 15 மியாவாக்கி அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 675 பூங்காக்கள், தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ளன.
இந்த எண்ணிக்கைய, 1,000க்கும் மேல் அதிகரிக்கும் பொருட்டு, கூடுதலாக, 350 பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது போன்ற பூங்காக்கள், மியாவாக்கி காடுகளால், சென்னை போன்ற மாநகரங்களின் வெப்ப அளவை குறைக்க முடியும்
.மேலும், பருத்திப்பட்டு முதல் நேப்பியார் பாலம் வரை, ஆற்றங்கரை ஓரங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பில், வரிசையாக மரங்கள் நடும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.இவ்வாறு, பிரகாஷ் கூறினார்.
நடிகர் விவேக் கூறுகையில், ''அரசு மருத்துவமனைகளில், பொது மக்கள் நிழலில் அமர வேண்டும் என்ற அடிப்படையில், மாநகராட்சியுடன் இணைந்து, மரம் நடும் விழா நடைபெற்று உள்ளது. இந்த மரங்கள் நடுவதன் வாயிலாக, கூடுதலாக, 2,000 டாக்டர்கள் இணைந்துள்ளனர்,'' என்றார்
No comments:
Post a Comment