இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 19, 2020

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம்

 இன்ஜினியரிங்  பட்டதாரிகளுக்கு உடனடி பணி நியமனம்


தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும், மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலைஇல்லாத பட்டதாரி, டிப்ளமா இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று தரப்படுகின்றன.


இதன்படி, பி.இ., மற்றும் டிப்ளமா முடித்த இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பங்கேற்றன. இதில், 121 பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா இளைஞர்கள் பங்கேற்றனர்.


அவர்களில் தகுதியானவர்களுக்கு, உடனடி பணி நியமன உத்தரவை, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் வீரராகவ ராவ் வழங்கினார். இந்த முகாமில், 34 பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும், 20 பேர், திறன் பயிற்சிக்கும் தேர்வு பெற்றனர்.

No comments:

Post a Comment