புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 19, 2020

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம்

 புதிய ஓய்வூதிய திட்டத்தை  எதிர்த்து தொடர் போராட்டம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட சி.பி.எஸ்.,(பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.


மதுரையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.


 2011 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும் தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.


2013 செப்., 4,6ல் நடந்த ராஜ்யசபா கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவும் எம்.பி.,களுக்கு ஜெ., உத்தரவிட்டிருந்தார். எனவே முதல்வர் பழனிசாமி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 


இதை வலியுறுத்தி மாவட்டங்களில் மக்கள் பிரநிதிகளை சந்திப்பது, ஜன., மூன்றாவது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, கலெக்டரிடம் பெருந்திரள் முறையீடு, பின் கோரிக்கை மாநில மாநாடு நடத்தப்படும். மாநாட்டில் போராட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றார். அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி கல்யாணி உடனிருந்தார்.

No comments:

Post a Comment