போலி சான்றிதழ் விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் 850 ஆசிரியர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 21, 2020

போலி சான்றிதழ் விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் 850 ஆசிரியர்கள்

 போலி சான்றிதழ் விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் 850 ஆசிரியர்கள்


ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 850 ஆசிரியர்கள், போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை அளித்து பதவி உயர்வு பெற்றிருப்பது கல்வித் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


போலி பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் தொடர்புடைய ஜோத்பூர் மண்டல ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்த கல்வித் துறை, அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 850 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது


இந்த பட்டியல் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


இதில், 124 சமஸ்கிருத ஆசிரியர்களும், 252 கணித, 275 ஆங்கில, 189 ஹிந்தி ஆசிரியர்களும் அடங்குவர்.


இந்த ஆசிரியர்கள் அனைவரும் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றிருப்பதும், இவர்கள் ஜோத்பூருக்கு வெளியே இருக்கும் பல்கலைக்கழகங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாக சான்றிதழ் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment