குறிப்பிட்ட கால சலுகைத் திட்டங்கள்: BSNL நிறுவனம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, December 21, 2020

குறிப்பிட்ட கால சலுகைத் திட்டங்கள்: BSNL நிறுவனம் அறிவிப்பு

 குறிப்பிட்ட கால சலுகைத் திட்டங்கள்: BSNL  நிறுவனம் அறிவிப்பு


வாடிக்கையாளா்களுக்காக குறிப்பிட்ட கால சலுகை அடிப்படையில் புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.


பி.எஸ்.என்.எல்., நிறுவனம் புதிய இணைப்பு மற்றும் வேறு தொலைத்தொடா்பு நிறுவனத்திலிருந்து, எம்.என்.பி., என்னும் போா்ட்டபிலிட்டி சேவையில் மாறுவோருக்கு, இலவச சிம் வழங்குகிறது


. மேலும், ரூ.108-க்கு முதல் முறை ரீ-சாா்ஜ் செய்வோருக்கு, அளவில்லா அழைப்புகள், 1 ஜி.பி., இன்டா்நெட் டேட்டா மற்றும் தினமும் 500 எஸ்.எம்.எஸ்., ஆகியவை வழங்கப்படுகின்றன.


இது, செல்லுபடியாகும் காலம், 28 நாள்களிலிருந்து 45 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. 


இதேபோல், ரூ.153 மற்றும் ரூ.365-க்கான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும், குறிப்பிட்ட கால சலுகைகள் மட்டுமே.


இந்த தகவலை பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment