துணை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழிக் கலந்தாய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, December 21, 2020

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழிக் கலந்தாய்வு

 துணை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழிக் கலந்தாய்வு


பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை இணையவழியே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் பட்டப்படிப்புகள் உள்ளன


அப்படிப்புகளுக்கு சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.


 இந்நிலையில், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி நிறைவடைந்தது. 


அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கலந்தாய்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இதுதொடா்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:


எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நிறைவடைந்ததும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தொடங்கப்படும்.


 கடந்த ஆண்டு வரை நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் இருப்பதால் இந்த ஆண்டு கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


 கலந்தாய்வை நேரடியாக நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment