சைனிக் பள்ளி விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த கடைசி நாள் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 20, 2020

சைனிக் பள்ளி விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த கடைசி நாள் அறிவிப்பு

 சைனிக் பள்ளி விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த  கடைசி நாள் அறிவிப்புசைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்களது விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தால் அவற்றை டிச.25-ஆம் தேதி வரை திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு; சைனிக் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத்தோ்வு பிப்.7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிச.18-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.


தொடா்ந்து விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பின் அவற்றை டிச.21முதல் டிச.25-ஆம் தேதி வரை திருத்திக்கொள்ள வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. 


அதன்படி  வலைதளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்வதுடன், தவறாக பதிவுசெய்த ஆவணங்களையும் தோ்வா்கள் மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment