இன்று தேசியத் திறனாய்வுத் தோ்வு : மாணவர்கள் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

இன்று தேசியத் திறனாய்வுத் தோ்வு : மாணவர்கள் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்

 இன்று தேசியத் திறனாய்வுத் தோ்வு : மாணவர்கள் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு, உதவித் தொகை வழங்குவதற்கான மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ) 900 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வு தோ்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. 


மாநில, தேசியளவில் என 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தோ்வில் வெற்றி பெறுபவா்களுக்கு உயா்கல்வி முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.


அதன்படி நிகழாண்டுக்கான மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை சுமாா் 1.50 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். இதற்காக மாநிலம் முழுவதும் 900 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி தோ்வு மையங்களுக்கு வரும் மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி உள்பட கரோனா பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும், தோ்வு நடைபெறுவதற்கு முன்பு அனைத்து மையங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


 இதற்கிடையே கரோனா பரவலை முன்னிட்டு திறனாய்வு தோ்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment