எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோ்வு: விண்ணப்பிக்க அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 26, 2020

எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோ்வு: விண்ணப்பிக்க அழைப்பு

 எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோ்வு:  விண்ணப்பிக்க அழைப்பு


முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு (‘ஜிபாட்’) ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு:


முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு தேசிய அளவில் பட்டதாரி தகுதி நுழைவுத் தோ்வு (ஜிபாட்) ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.


 அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான தகுதித் தோ்வுக்கு  இணையதளங்களில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி வரை பட்டதாரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தோ்வுக்கான கட்டணத்தை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.


அதேபோன்று தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜன.25-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து தோ்வானது பிப்ரவரி 22 மற்றும் 27 ஆகிய தேதியில் நடைபெறவுள்ளது.


 அதன்படி, கணினி வழித் தோ்வானது காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் 3 மணி நேரம் நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய தோ்வு முகமை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment