இளம் மழலையர் பள்ளிகளுக்கு கட்டண விலக்கு: தமிழக அரசுக்கு வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 29, 2020

இளம் மழலையர் பள்ளிகளுக்கு கட்டண விலக்கு: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

 இளம் மழலையர் பள்ளிகளுக்கு கட்டண விலக்கு: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்


கொரோனா பேரிடர் தொடரும் நிலையில் இளம் மழலையர் பள்ளிகளுக்கு கட்டணங்களிலிருந்து இந்தாண்டு தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும், என தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


மதுரையில் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது:


 கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக இளம்மழலையர் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் இதுவரை இல்லை. இரண்டரை வயது முதல்ஆறு வயது குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமற்றது. 


மாநிலத்தில் 5000க்கும் மேற்பட்ட இளம்மழலையர் பள்ளிகள் உள்ளன. கொரோனா பேரிடரால் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. பத்து மாதங்களாக எந்த வருவாயுமின்றி, ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையுள்ளது.


 இளம்மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். அரசுக்கு செலுத்தும் கட்டணங்களிலிருந்து இந்தாண்டு விலக்கு அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment