போலீசில் 5.31 லட்சம் பணியிடங்கள் காலி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 29, 2020

போலீசில் 5.31 லட்சம் பணியிடங்கள் காலி

 போலீசில் 5.31 லட்சம் பணியிடங்கள் காலி


நாடு முழுதும் போலீஸ் துறையில், 5.31 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 



மத்திய ஆயுதப் போலீஸ் படைகளில், 1.27 லட்சம் இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


நாடு முழுதும் மாநில போலீஸ் துறைகளின் கீழ், ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள், 26 லட்சத்து, 23 ஆயிரத்து, 225. இதில், இம்மாத இறுதி நிலவரப்படி, 20 லட்சத்து, 91 ஆயிரத்து, 488 பேர் பணியில் இருப்பர். 


அதன்படி, மொத்தம், ஐந்து லட்சத்து, 31 ஆயிரத்து, 737 பணியிடங்கள் காலியாக இருக்கும்.கடந்த ஆண்டில் மட்டும், பெண்கள் போலீஸ் துறையில் இணைவது, 16.05 சதவீதம் உயர்ந்துள்ளது.


சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட, மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள், 11 லட்சத்து, ஒன்பதாயிரத்து, 511. இதில், ஒன்பது லட்சத்து, 82 ஆயிரத்து, 391 பேர் பணியில் இருப்பர்.


அதன்படி, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 120 பணியிடங்கள் காலியாக இருக்கும்.


மத்திய படைகளில், 2.98 சதவீதம், அதாவது, 29 ஆயிரத்து, 249 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். நாடு முழுதும், 800 போலீஸ் மாவட்டங்களில், 16 ஆயிரத்து, 955 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment