தேர்தல் அறிக்கைகளில் CPS ரத்து அறிவிப்பு; ஆசிரியர் சங்கம் தீர்மானம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 29, 2020

தேர்தல் அறிக்கைகளில் CPS ரத்து அறிவிப்பு; ஆசிரியர் சங்கம் தீர்மானம்

 தேர்தல் அறிக்கைகளில் CPS ரத்து அறிவிப்பு;  ஆசிரியர் சங்கம் தீர்மானம்


'அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்.,) ரத்து அறிவிப்பை இடம் பெற செய்ய வேண்டும்' என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.


மதுரையில் இச்சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர் ஆண்டறிக்கை வாசித்தார். அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில், வரும் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் சி.பி.எஸ்., ரத்து குறித்த அறிவிப்பு இடம் பெற வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்வி, ஊக்க ஊதியம் ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும்.


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் பணப் பலன்கள் தாமதிமின்றி கிடைக்க சி.இ.ஓ.,க்கள் தலைமையில் குறைதீர்க் கூட்டங்கள் நடக்க வேண்டும். 


வரும் தேர்தல் பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், உடல் நலம் பிரச்னையுள்ளவர்களுக்கு தேர்தல் பணி வழங்குவதில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment