யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு எப்போது? - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 27, 2020

யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு எப்போது?

 யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு எப்போது?


இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன.


 அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு நிகழாண்டில், மொத்தம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. 


அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.


இதையடுத்து, அதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிவா் புயல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும், நிகழாண்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 கல்லூரிகளுக்கும் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment