கால்நடை மருத்துவ படிப்பு நாளை கவுன்சிலிங் துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 21, 2020

கால்நடை மருத்துவ படிப்பு நாளை கவுன்சிலிங் துவக்கம்

 கால்நடை மருத்துவ படிப்பு நாளை கவுன்சிலிங் துவக்கம்


கால்நடை மருத்துவ படிப்புக்கு சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னையில் நாளை நடைபெற உள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன


. அவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு; உணவு, பால்வளம் மற்றும் கோழியின தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகளில், 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், 13 ஆயிரத்து, 901 பேர் இடம் பெற்றுள்ளனர்


.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் என, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை நடைபெறுகிறது.


பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, பல்கலையின் இணையதளங்களில், ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.


 தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், 24ம் தேதி காலை, 10:00 முதல், 28ம் தேதி மாலை, 6:00 மணி வரை பல்கலையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை, 30ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


 இந்த ஆணையை பதிவிறக்கம் செய்து, ஜனவரி, 13 மாலை, 5:00 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான பதிவு, ஜன., 19ல் துவங்கும். கவுன்சிலிங் தொடர்பான விபரங்களுக்கு, பல்கலையின் இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment