தமிழகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விவரம் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, December 21, 2020

தமிழகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விவரம்

 தமிழகத்தில்  வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விவரம்


தமிழகத்தில், 2019 -- 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, இதுவரை, 22 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.


நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும், மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும், ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.கடந்த, 2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரலில் துவங்கியது. அபராதம் இல்லாமல் கணக்கு தாக்கல் செய்ய, தணிக்கை செய்யப்படாத கணக்கிற்கு, வரும், 30ம் தேதி வரையும்; தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்கு களுக்கு, ஜன., 31 வரையும் அவகாசம் உள்ளது.இதன்படி, 2019- - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, இதுவரை, நாடு முழுதும், 3.65 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.


அதேநேரத்தில், 2018 - -19ம் நிதியாண்டில், இதே காலகட்டத்தில், 3.50 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்திருந்தனர்


.தமிழகத்தில் இதுவரை, 22 லட்சம் பேர், வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டில், 42 லட்சம் பேராக இருந்தது.

No comments:

Post a Comment