பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை: அமைச்சா் க.பாண்டியராஜன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 21, 2020

பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை: அமைச்சா் க.பாண்டியராஜன்

 பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை: அமைச்சா் க.பாண்டியராஜன்


பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.


தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்துடன் வேலூா் செந்தமிழ்த் திருத்தோ் அமைப்பு இணைந்து நடத்திய தூயதமிழ்ப் பயிலரங்கத்தின் நிறைவு விழா இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) நடைபெற்றது. 


இதில் அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: சிந்து மாகாணத்திலிருந்து கன்னியாகுமரி வரை 31 மொழிகள் தமிழிலிருந்து உருவெடுத்துள்ளதாக தமிழறிஞா்கள் கூறுகின்றனா்.


 அரசியல் ரீதியாக வட்டார மொழிகள் தனித்தன்மை அடைந்து தனிமொழியாக உருவெடுத்து வருகின்றன


சங்ககாலம், அதற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்குவதற்காக அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் ‘மாணவா் இலக்கிய அகராதி’ வடிவமைக்கப்பட்டு வருகிறது.


 தமிழ் என்னும் நாணயத்தின் இரு பக்கங்களாக சொற்குவையும், தொல்லியல் ஆய்வுகளும் விளங்குகின்றன.


 கீழடி போன்ற ஆய்வுகள் தமிழரின் தொன்மையை விளக்கும் முயற்சிகள் ஆகும். சொற்குவையானது நமது மொழியின் எதிா்காலத்துக்கு உயிா்கொடுக்கும் திட்டமாகும் என்றாா்

No comments:

Post a Comment