முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 26, 2020

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு  மத்திய அரசு விருது



அறநிலையத் துறை கணினிமயமாக்கப்படும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016 செப்.,ல் அறிவித்தது தான் அவரது கடைசி அறிவிப்பு. 



இந்த அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது என்பது புரியாத புதிராக இருக்கும் போது மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.


சட்டசபையில் அறநிலையத் துறை தொடர்பாக பேசிய ஜெயலலிதா, '1 கோடி ரூபாயில் இத்துறை கணினிமயமாக்கப்படும்' என்றார். பிறகு அவருக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.அவர் அறிவித்தபடி, இத்துறை இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படவில்லை. இச்சூழலில், மத்திய அரசு விருதுக்கு இத்துறை தேர்வாகியுள்ளது.


அறநிலையத் துறை ஊழியர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில் தொடர்பான வரலாறு, சிறப்புகள், வருமானம், புகார்கள், அதுதொடர்பான நடவடிக்கைகள், வருமானம், சொத்து, வழக்கு விபரங்கள் என அனைத்து வித தகவல்களும் இடம் பெற்ற, 'சாப்ட்வேர்' இன்னும் உருவாக்கப்படவில்லை. கணினிமயமாக்கலுக்கு இதுதான் அடிப்படை. ஆனால், எல்லாமே வெப்சைட் அளவில் உள்ளது.


பத்திரப்பதிவு துறையில் பெரும்பாலான சான்றுகளை ஆன்லைனில் பெறும் வசதி உள்ளது. அறநிலையத் துறையிலும் ஆன்லைன் வசதிகள், விபரங்கள் பெறுவது கணினிமயமாக்கலின் ஒருபகுதி. அதற்கு அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டிருக்க வேண்டும். இது எந்த அளவிற்கு உள்ளது என்ற விபரம் இதுவரை துறை சார்பில் வெளியிடப்படவில்லை.


ஜெ., அறிவிப்புக்கு முன் எப்படி நிர்வாக பதிவேடுகள் பராமரிக்கப்பட்டதோ, அதைதான் இன்னும் பராமரித்து வருகிறோம். இச்சூழலில் கணினிமயமாக்கப்பட்டதற்காக மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment