'பூஜ்ஜியம்' கல்வியாண்டு: அரசு ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 26, 2020

'பூஜ்ஜியம்' கல்வியாண்டு: அரசு ஆலோசனை

 'பூஜ்ஜியம்' கல்வியாண்டு: அரசு ஆலோசனை


தமிழகத்தில் இந்தாண்டு 'பூஜ்ஜியம்' கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும்'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அவர் கூறியதாவது:


 தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால் இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத்தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். நடப்பாண்டில் அரசு பள்ளியை சேர்ந்த 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.


‌ பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால்... ‌


பூஜ்ஜியம் கல்வியாண்டு குறித்து கல்வித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: 


நடப்பு கல்வியாண்டில் கற்பித்தல் பணி நடக்காததால் கடந்த கல்வியாண்டு முடிவில் எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ அதே நிலையில் அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர்.


குறிப்பாக 2019 ~20 கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் 2021 ~ 22 கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு படிக்க நேரிடும். 


இம்முடிவை பள்ளி கல்வித்துறை மட்டும் தன்னிச்சையாக செய்ய முடியாது.உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் இணைந்து தொடக்க கல்வி முதல் முதுகலை படிப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்படி பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும். 



மாநிலம் வாரியாக இம்முடிவு எடுத்தாலும் முறையானதாக இருக்காது. நாடு முழுதும் ஒரே மாதிரி பூஜ்ஜியம் கல்வியாண்டு அமல்படுத்தினால் யாருக்கும் பாரபட்சம் இருக்காது.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment