நாசா ராக்கெட்டில் பறக்க போகும் தஞ்சை மாணவரின் 'சேட்டிலைட்' - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

நாசா ராக்கெட்டில் பறக்க போகும் தஞ்சை மாணவரின் 'சேட்டிலைட்'

 நாசா ராக்கெட்டில் பறக்க போகும் தஞ்சை மாணவரின் 'சேட்டிலைட்'


தஞ்சை கல்லுாரி மாணவர் கண்டுபிடித்த 'சேட்டிலைட்' அமெரிக்காவின் நாசா விண்வெளி தளத்தில் இருந்து, விண்ணில் ஏவப்பட உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸ்தீன், 18 சாஸ்த்ரா கல்லுாரியில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 


இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள், 2021 ஜூன் மாதம் நாசா விண்வெளி தளத்தில் இருந்து, ஏவப்பட உள்ளது.


மாணவர் ரியாஸ்தீன் கூறியதாவது: நாசா விண்வெளி மையம் மற்றும் 'ஐ டூ லேனிங்' அமைப்பு இணைந்து, 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. 


கடந்த, 2019~ 20 ஆண்டுக்கான போட்டியில், 73 நாடுகளை சேர்ந்த, மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி இறுதி ஆண்டில் இருந்து, நான், ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன். என் ஆராய்ச்சியில் உருவான விசன்~1 மற்றும் விசன் ~2 இரண்டு செயற்கைகோள்கள், போட்டியில் தேர்வாகி உள்ளது.இரு செயற்கைகோளும், 37 மில்லி மிட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது.


 இதற்கு, 'பெமிடோ ' என, பெயரிடப்பட்டுள்ளது. 'பெமிடோ' என்பது எடையில் சிறியது என பொருள். இது, டெக்னாலஜி எக்ஸ்பிரிமெண்ட்டல் செயற்கைகோள். செயற்கைகோள் விசன் ~ 1 பாலி எதரி இமைடு அல்டம், 9085, விசன்~2 பாலி எதரி இமைடு அல்டம், 1,010, என்று சொல்ல கூடிய தெர்மோ பிளாஸ்டிக் மூலம், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதற்கு தேவையான, மின் சக்தியை, செயற்கைக் கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து பெற முடியும். இதில், 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையாக தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


நாசா மூலம் விண்வெளியில் செலுத்துவதற்கு விசன் ~1 கருவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர்.,~7 ராக்கெட் மூலம், செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. விசன்~2 செயற்கைக்கோள் ஆர்.பி~6 என்ற தளத்தில் இருந்து ஆராய்ச்சி பலுானில் பறக்க விடப்படுகிறது. இவ்வாறு மாணவன் கூறினார்.

No comments:

Post a Comment